Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost


Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


ஓடுகள் வெளியே வருவதற்கு 8 காரணங்கள் மற்றும் அதைத் தவிர்ப்பது

ஓடுகள் வெளியே வருதல் பல வீடுகளில் ஒரு பொதுவான பிரச்சனை, ஆனால் அது அப்படி வரக்கூடாது. இந்த தகவல் தரும் இடுகைகள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய எட்டு வித ஓடுகள் வெளியே வருதல் மற்றும் அதிக செலவாகும் பழுது நீக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி செயல்படுத்தக் கூடிய தீர்வுகளைக் கொடுக்கிறது.

Share:


ஓடுகள் வெளியே வருதல் என்றால் என்ன?

அவற்றின் அழகான தோற்றத்தின் காரணமாக, பெரும்பாலான வீடுகள் பளிங்கு அல்லது கான்கிரீட் தளத்திற்கு பதிலாக தள ஓடுகளைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இந்த ஓடுகளின் முறையற்ற கவனிப்பு அவை வெளியே வந்து, உடைந்து அல்லது வளைந்து, தரையில் சமச்சீரற்ற தன்மையை உருவாக்குகிறது. இது ஓடுகள் வெளியே வருதல் (டைல் பாப்பிங்) என்று அழைக்கப்படுகிறது..

ஆரம்பத்திலிருந்தே ஓடுகள் பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன, அவற்றின் கவர்ச்சியைப் பெற எந்த நடைமுறையும் அல்லது மெருகூட்டலும் செய்ய வேண்டியதில்லை. இருப்பினும், ஓடுகள் வெளியே வருதல் ஒரு ஏமாற்றம் தரும் மற்றும் கவலைப்பட வேண்டிய விஷயம்.

cdxc


“இது எனது இல்லத்திற்கு ஒரு வசீகரமான மற்றும் அழகான பார்வையைக் கொடுக்குமா?"

 

ஒரு மனிதர் தனது வீட்டைக் கட்டும் போது பதிலளிக்க முயற்சிக்கும் மிக முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். மேற்கூரை பாணி மற்றும் ஜன்னல்கள் முதல் சுவர் அமைப்பு மற்றும் தரை வரை, ஒரு கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சத்தின் இறுதி முடிவும் கண்ணுக்கு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதே.

இருந்தபோதிலும், சில நேரங்களில் மனிதர்கள் வசீகரமான தோற்றத்தைத் தவிர்த்து கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணிகளை மறந்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஓடுகள் பதிப்பதற்கு அதன் உழைப்புத் தன்மையை உறுதி செய்வதற்கு சரியான அக்கறை தேவை என்பதை.

சரியான பதித்தல் முறைக்கு, பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பதித்த பின்னர் எடுத்துக்கொள்ள வேண்டிய அக்கறை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது தள ஓடுகளுக்கு குறை ஏற்படுத்தலாம். இந்த குறைகளில் பொதுவான ஒன்று ஓடுகள் வெளியே வருதல்


ஓடுகள் வெளியே வருவதற்கான காரணங்கள்

எச்சரிக்கை ஏதுமின்றி ஓடுகள் வெளியே வருவது அல்லது குமிழ் வருவது வசிப்பவர்களுக்கு ஒரு பெரிய ஆரோக்கியக் கேடு ஆகும். அதனால், ஓடுகள் வெளியே வருவதற்கான சாத்தியங்களை புரிந்துகொள்ளுதல் அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. :

 

1 ) பொருத்தமற்ற சுத்தம் செய்தல்



 

தள ஓடுகளை பதிப்பதற்கு முன்னர் அவற்றையும் பதிக்கப்போகும் இடத்தையும் சுத்தம் செய்வது மிக அவசியம் ஆகும். அப்படி செய்யாவிட்டால் ஓடுகள் வளைவது அல்லது வெளியே வருவது போன்ற பின்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும். இது ஏனென்றால் தரையை சரியாக சுத்தம் செய்யாததால் அது ஒரே சீரான ஓட்டும் அடுக்கை ஏற்படுத்தாது.

 

2 )ஒரு சீர் இல்லாமல் தள ஓட்டை பதிப்பது



 

பெரிய அளவிலான ஓடுகளை பதிப்பதில் ஒரு குறிப்பிட்ட சாந்து பூசும் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இது ஓடுகள் ஒரு உறுதியான பிடிப்பை பசையோடு இணைவதை உறுதிப்படுத்துவதற்காக. நீங்கள் ஒரு மரப் பொருளைக் கொண்டு ஓடுகளை சிறிது அசைத்து உள்ளே தள்ள வேண்டும்.

 

உறுதிப்படும் நடைமுறையை கடைபிடிக்காதது சீரற்ற முறையில் ஓடுகள் பதிக்கப்பட்டு, அவை வெளியே வரச்செய்யும் வாய்ப்புகள் உண்டு.

 

3. தரை விரிவடைதல்


 

ஓடுகள் ஊடுருவக்கூடியவை, அவை திரவங்கள் போன்ற பொருட்களை ஊடுருவ அனுமதிக்கும், அதிக அளவிலான ஈரப்பதம் ஊடுருவுவதனால் அது உப்பச் (வீங்கச்) செய்கிறது. இதன் முடிவு மேற்பரப்பு விரிவடைகிறது அதன் அழுத்தத்தினால் ஓடுகள் வெளியே வருகின்றன.

 

4 )மோசமான தரமுள்ள ஓட்டுப் பொருளை பயன்படுத்துவது



 

தள ஓடுகளை பதிக்க ஓட்டுப் பசை தேர்ந்தெடுப்பதில் தரத்தை பார்ப்பது ஒரு முக்கியமான அம்சம். தரம் குறைவான ஓட்டுப் பசையை பயன்படுத்துவது ஓடுகள் ஒரு உறுதியான பாதுகாப்பான பிடிப்பை கீழே உள்ள பொருளோடு ஏற்படுத்தாது.

அதனால், சுற்றுச் சூழல் மாற்றத்தினால் அதாவது வெப்பநிலை, ஈரப்பத நிலை மாற்றம் ஓட்டுப் பொருள் ஓட்டோடு உள்ள பிடிப்புத்தன்மை இழந்து சேதமான அல்லது குமிழ் வரும் ஓட்டை ஏற்படுத்துகிறது.

 

5 )மோசமான தரமுள்ள ஓடுகள் ஓட்டுப் பசைகள் பயன்படுத்துதல்



 

மிக உயர்ந்த தர ஓடுகள் ஓட்டுப் பசையை முக்கியமாக நேரடி சூரிய ஒளி படும் இடங்களில் பயன்படுத்துவது மிக மிக முக்கியம்.பசையே பயன்படுத்தாவிட்டால் அல்லது தரம் குறைந்த பசையை பயன்படுத்தினால், சூரிய ஒளியினால் விரிவடையும் அதனால் அழுத்தம் காரணமாக வீக்கம் ஏற்படும்.

 

6 பழைய ஓடுகள்



பழைய ஓடுகள் அவற்றின் வளையும் தன்மை மற்றும் வெப்பநிலை மாற்றங்களை தாங்கும் திறனை இழப்பதால் உடையும் நிலையை அடைகின்றன. இவற்றை பயன்படுத்துவது ஓடுகள் வெளியே வரும் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறன.

 

7 வளைந்த ஓடுகள்

சில நேரங்களில், தயாரிப்பின்போதே சில ஓடுகள் வளைந்துவிடுகிறன. இவற்றை பயன்படுத்துவது ஓடுகள் சேதமாவது அல்லது வெளியே வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

 

8. கீழ்த்தரை சமமாக இல்லாதது

கீழ்தரை ஒரே மட்டமாக இல்லாமல் இருந்தால் ஓட்டும் பசை அல்லது கலவையோடு ஒரே சீரான பிணைப்பை ஏற்படுத்தாது. இது உங்களது தரை சீரற்றும் அழகில்லாமலும் இருப்பதாகத் தோன்றும்.


 

ஓடுகள் வெளியே வருவதைத் தவிர்ப்பது எப்படி?



நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தால், நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஏதும் கோளாறுகள் இருக்கிறதா என்று சோதிப்பது. இது நீங்கள் உடனடியாக செயல்பட்டு இயன்றளவு விரைவாக பிரச்னையை தீர்க்க வேண்டும்.

 

புதுப்பித்தலின் போது, ஒப்பந்ததாரர் அல்லது கட்டிடம் கட்டுபவர் ஓடுகள் வெளியே வருவதை தவிர்ப்பதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்திருப்பதை உறுதி செய்யவேண்டும்.

 

ஒரு கனமற்ற பொருளைக் கொண்டு தட்டிப் பார்த்து ஒட்டாத குழி ஓடுகளை அடையாளம் காண்பது தற்போதைய வீட்டு உரிமையாளர்கள் செய்யவேண்டிய நல்ல முறையாகும். நீங்கள் ஏதேனும் கண்டால் அந்த பிரச்னையை தீர்க்க எளிதான வழி தள ஓடுகளை ஓட்டும் பசையை உள்ளே செலுத்துவதாகும்.

 

ஓடுகள் வெளியே வந்தால், நீங்கள் கீழே வரும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்:

 

  • அவை ஓடுகள் வெளியே வருவது நிற்கும் வரை விலகி இருங்கள்
  • நின்றதும், ஏதேனும் சில்லுகள் அல்லது விரிசல்களை உடைந்த ஓடுகளில் இருந்து அப்புறப்படுத்துங்கள்..
  • ஒரு தடிமனான அட்டை கொண்டு சேதமான மேற்பரப்பை மூடுங்கள்.
  • அந்த இடத்தில் சோபா அல்லது கபோர்ட் போன்றவை வைத்து மூடிவிடுங்கள்

 

நீங்கள் தரை முழுவதும் தளர்ந்த ஓடுகளை கண்டு இந்த ஓடுகள் வெளியே வருவதால் என்ன செய்வது என்று நினைத்தால், ஒரே முளுவமையான வேலை அவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டு மீண்டும் நடைமுறையை செய்வதுதான்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1 .என்ன காரணத்தினால் ஓடுகள் வெளியே வருகிறன?

ஓடுகள் வெளியே வருவது அல்லது தளர்வது தவறான பதிப்பு முறை, சமமற்ற கீழ்தரை, ஈரம் சார்ந்த பிரச்சனைகள், பலவீனமான பசை அதிக ஆட்கள் நடமாற்றம் அல்லது கட்டமைப்பு சாதனங்களை நகர்த்துவது காரணமாக இருக்கலாம்.

 

 2 .நானாக தளர்ந்த ஓடுகளை சரி செய்ய முடியுமா?

 

ஒரு தளர்ந்த ஓட்டை எடுத்து பசையை நீக்கிவிட்டு புதிதாக பசை தடவி மீண்டும் ஓட்டை பதிப்பது சாத்தியம்தான். இருந்தபோதிலும், பிரச்னை மிக தீவிரமாக இருக்கும்போது அல்லது உங்களுக்கு போதுமான திறமை இல்லாவிட்டால் ஒரு தொழில் நிபுணரை அழைப்பது மிகச் சிறந்தது.

 

3. முதல் முறையே ஓடுகள் வெளியே வருவதை எப்படி தவிர்க்கமுடியும்?

 

ஓடுகள் வெளியே வருவதை தவிர்க்க ஒரு தேர்ச்சிபெற்ற மற்றும் அனுபவமுள்ள பதிப்பவரை கூப்பிடுங்கள், அதிகளவு ஈரப்பதம் மற்றும் அதிகமாக நடமாடுவதை தவிர்க்கவும் மேலும் தொடர்து பராமரிக்க வேண்டும்.



உங்கள் வீட்டின் மிக முக்கியமான பகுதி தரைதான். நீங்கள் ஓடுகள் கொண்டு இடத்தின் அழகை பெரிது படுத்தும்போது ஓடுகள் பாதிக்கும் நடைமுறைக்கு சில தீவிரமான கவனமும் முயற்சியும் தேவை.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....