Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் 4 முறைகள், அவற்றின் தேவை மற்றும் நன்மைகளுக்கான வழிகாட்டி

உங்கள் வீட்டை உலர்வாகவும், நீர் சேதத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க, பேஸ்மெண்ட்டில் ஈரப்பதம் ஏற்படுவதற்கான காரணங்கள், பல்வேறு வகை வாட்டர்ப்ரூஃபிங் முறைகள் மற்றும் பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளவும்.

Share:


பேஸ்மெண்ட்கள் என்பது எந்தவொரு வீட்டிற்கும் ஒரு இன்றியமையாத பகுதியாகும், அது கூடுதல் வாழ்விடம், சேமிப்பிடம் மற்றும் பயன்பாட்டு பகுதிகளை வழங்குகிறது. எனினும், அவை வீட்டு உரிமையாளர்களுக்கு விரக்தியையும் ஏற்படுத்தும், அதுவும் குறிப்பாக நீர் கசிவு அல்லது நீர் சேதம் ஏற்படும் போது. அஸ்திவாரம் அல்லது சுவர்களில் உள்ள நுண்துளைகள்/விரிசல்கள் மூலம் நீர் பேஸ்மெண்ட்களுக்குள் ஊடுருவி, பூஞ்சை வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்துகிறது.

 

இங்குதான் பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் உதவுகிறது. பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்பது ஒரு பேஸ்மெண்ட்டை நீர் சேதத்திலிருந்து சீல் செய்து பாதுகாக்கும் செயல்முறையாகும். பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கில் பல்வேறு முறைகள் உள்ளன, அவை ஒவ்வொன்றிற்குமெனச் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன.

 

இந்த வலைப்பதிவில், பல்வேறு பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், ஒவ்வொரு முறையின் நன்மைகள் மற்றும் பேஸ்மெண்ட் நீர் சேதத்திற்கான பொதுவான காரணங்கள் ஆகியவற்றை நாம் ஆராய்வோம். இந்த வலைப்பதிவின் முடிவில், நீர் சேதத்திலிருந்து உங்கள் பேஸ்மெண்ட்டை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்வீர்கள், மேலும் பல ஆண்டுகளுக்கு அது பாதுகாப்பான மற்றும் செயல்படும் நிலையில் உள்ள ஒரு இடமாக இருப்பதை உறுதிசெய்வீர்கள்.





பேஸ்மெண்ட்டில் ஈரப்பதத்திற்கான காரணங்கள்

 

1) ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் :

பேஸ்மெண்ட்டில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று அஸ்திவாரம் அல்லது சுவர்களில் உள்ள விரிசல்கள் மூலம் நீர் கசிவதாகும். சுற்றியுள்ள மண் அல்லது மோசமான வடிகால் அமைப்புகளால் ஏற்படும் ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் காரணமாக இது ஏற்படலாம்.

 

2) முறையற்ற மண் மற்றும் வடிகால் அமைப்புகள் :

பேஸ்மெண்ட்டில் ஈரப்பதத்திற்கான ஒரு பொதுவான காரணம் வீட்டைச் சுற்றியுள்ள மண் மற்றும் வடிகால் அமைப்புகள் போதுமானதாக இல்லை என்பதாகும். அஸ்திவாரத்தைச் சுற்றியுள்ள மண் வீட்டை விட்டுத் தள்ளிச் சரிவாக இல்லை என்பதாலோ, அல்லது போதிய வடிகால் வசதி இல்லாததாலோ, தண்ணீர் தேங்கிப் பேஸ்மெண்ட்டிற்குள் கசியக்கூடும்.

 

3) மேசமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுப் பராமரிக்கப்படும் சாக்கடைகள் :

மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்டுப் பராமரிக்கப்படும் சாக்கடைகளும், பேஸ்மெண்ட்டில் ஈரப்பதப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கலாம். அடைப்பு ஏற்பட்ட அல்லது சரியாகச் செயல்படாத சாக்கடைகளில் தண்ணீர் ஓவர்ஃப்ளோ ஆகி அஸ்திவாரத்தைச் சுற்றித் தேங்கி, பேஸ்மெண்ட்டில் நீர் சேதத்திற்கு வழிவகுக்கும்.

 

4) ஆவி நீராதல் :

பேஸ்மெண்ட்டில் உள்ள ஈரப்பதப் பிரச்சனைகளுக்கு ஆவி நீராதல் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சூடான, ஈரப்பதமான காற்று, சுவர்கள் அல்லது குழாய்கள் போன்ற குளிர்ச்சியான மேற்பரப்புகளுடன் தொடர்பு கொண்டு, நீர்த்துளிகளாக மாறும்போது இது நிகழ்கிறது. நல்ல காற்றோட்டம் இல்லாத அல்லது போதுமான இன்சுலேஷன் இல்லாத பேஸ்மெண்ட்களில் ஆவி நீராதல் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையாக இருக்கும்.

 

5) உங்களின் பேஸ்மெண்ட்டில் ஏற்படும் விரிசல்கள்:


அஸ்திவாரத்தைச் சுற்றி ஒழுங்கற்ற சாய்வு மற்றும் பேஸ்மெண்ட் சுவர்கள் அல்லது ஃப்ளோர்களில் விரிசல்கள் உள்ளிட்டவையும் ஈரப்பதப் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம். அஸ்திவாரத்தைச் சுற்றியுள்ள மண் வீட்டை விட்டுத் தள்ளிச் சரிவாக இல்லை என்றால், தண்ணீர் தேங்கிப் பேஸ்மெண்ட்டிற்குள் கசியக்கூடும். அஸ்திவாரம் அல்லது சுவர்களில் உள்ள விரிசல்கள் உள்ளே தண்ணீர் கசிந்து வருவதற்கு அனுமதிக்கிறது, இது பேஸ்மெண்ட்டில் நீர் சேதத்திற்கு வழிவகுக்கும்.



பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் முறைகள்

 

1) உட்புற சீலண்ட்கள்

உட்புறச் சீலண்ட்கள் என்பது, பேஸ்மெண்ட் சுவர்கள் மற்றும் ஃப்ளோர்களின் உட்புறத்தில் சீலண்ட்களைப் பூசும் ஒரு வகையான பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் முறை ஆகும். விரிசல்கள், இடைவெளிகள் அல்லது நுண்துளை கான்கிரீட் மூலம், அதுவும் குறிப்பாக நிலத்தடி நீர் அதிகமாக உள்ள அல்லது மோசமான வடிகால் உள்ள பகுதிகளில் நீர் பேஸ்மெண்ட்டிற்குள் கசியலாம். இது நீர் சேதம் மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும், அத்துடன் கட்டிடத்தின் அஸ்திவாரம் மற்றும் கட்டமைப்பு உறுதிக்குச் சேதம் விளைவிக்கும். உட்புறச் சீலண்ட்கள் பேஸ்மெண்ட் சுவர்கள் மற்றும் ஃப்ளோரின் உட்புறத்தில் ஒரு வாட்டர்ப்ரூஃப் தடையை உருவாக்குவதன் மூலம் தண்ணீர் கசிவதைத் தடுக்கின்றன. இந்த சீலண்ட் ஒரு தடையை உருவாக்கி, காங்கிரீட் வழியே தண்ணீர் கசிவதைத் தடுக்கிறது. இருப்பினும், இந்த முறை சிறிய நீர் சேதத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள ஈரப்பதத்தின் காரணங்களை நிவர்த்தி செய்யாது.

 

2) வெளிப்புற வாட்டர்ப்ரூஃபிங் - பேஸ்மெண்ட்

வெளிப்புறப் பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் தேவைக்கான முக்கிய காரணம் அஸ்திவாரச் சுவர்களின் வெளியில் இருந்து நீர் ஊடுருவுவதாகும். வெளிப்புறப் பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்பது அஸ்திவாரத்தின் வெளிப்புறத்தைச் சுற்றித் தோண்டி, சுவர்களின் வெளிப்புறத்தில் ஒரு வாட்டர்ப்ரூஃப் பூச்சு அல்லது படலத்தைப் பூசுவதாகும். நீர் சேதத்தைத் தடுப்பதற்கும் கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதியைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும். எனினும், இதை இன்ஸ்டால் செய்வதற்கு அதிகம் செலவாகலாம் மற்றும் இடையூறு மிக்கதாக இருக்கலாம், ஏனெனில், இதற்கு அஸ்திவாரத்தைச் சுற்றித் தோண்ட வேண்டும் மற்றும் வாட்டர்ப்ரூஃபிங் முடிந்ததும் நிலத்தைச் சமப்படுத்துவது மற்றும் பிற பழுதுபார்ப்புகள் தேவைப்படலாம். எனினும், இந்த முறை பேஸ்மெண்ட்டில் நீர் ஊடுருவலைத் தடுக்க மிகவும் நம்பகமான மற்றும் நீடித்திருக்கும் தீர்வாகும்.

 

3) உட்புற வாட்டர்ப்ரூஃபிங் - பேஸ்மெண்ட்

ஈரப்பதத்தின் முக்கிய காரணம் ஆவி நீராதல் என்கின்றபோது உட்புறப் பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் தேவை எழுகிறது. சுவர்கள் அல்லது ஃப்ளோர் வழியாக பேஸ்மெண்ட்டில் நுழையும் தண்ணீரை வடிகால் அமைப்பிற்குள் செலுத்துவதன் மூலம் உட்புற பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் வேலை செய்கிறது, பின்னர் அந்த தண்ணீர் சம்ப் பம்ப் மூலம் பேஸ்மெண்ட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறது. வடிகால் குழாய் பொதுவாகப் பேஸ்மெண்ட் ஃப்ளோருக்குக் கீழே இன்ஸ்டால் செய்யப்படும், மேலும் அவை, பேஸ்மெண்ட்டின் மிகவும் கீழாக உள்ள இடத்தில் ஒரு குழியில் நிறுவப்பட்டுள்ள சம்ப் பம்ப் நோக்கிக் கீழ்நோக்கிச் சாய்ந்திருக்கும். சம்ப் பம்ப், குழியில் உள்ள நீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் போது தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அது பேஸ்மெண்ட்டிலிருந்து தண்ணீரை வெளியேற்றி அஸ்திவாரத்திலிருந்து தள்ளி வைக்கிறது.

 

4) அஸ்திவார விரிசல் உட்செலுத்தல்கள்

அஸ்திவார விரிசல் உட்செலுத்தல்கள் என்பது, அஸ்திவாரத்தைச் சுற்றியுள்ள மண்ணைத் தோண்டாமல், அஸ்திவாரச் சுவர்களில் உள்ள விரிசல்களை உள்ளே இருந்து சரிசெய்யும் முறையாகும். இந்த செயல்முறையானது விரிசல்களில் ஒரு திரவ பாலியூரிதீன் அல்லது எபோக்சியை உட்செலுத்துவதை உள்ளடக்கியதாகும், பின்னர் அது கடினமாகி, நீர் ஊடுருவுவதைத் தடுக்கும் ஒரு வாட்டர்ப்ரூஃப் தடையை உருவாக்குகிறது. இந்த முறை பொதுவாக கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக இல்லாத சிறிய விரிசல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இதை விரைவாகவும், கட்டிடத்தில் குடியிருப்போருக்கு குறைவான இடையூறுகளுடனும் செய்து முடிக்க முடியும். எனினும், கிராக் ஃபில்லர்கள் அல்லது உட்செலுத்தல்கள் விரிசல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்யாது, இதற்கு கூடுதல் வாட்டர்ப்ரூஃபிங் நடவடிக்கைகள் தேவைப்படலாம். கூடுதலாக, இன்னும் விரிவான பழுது பார்த்தல் தேவைப்படும் பெரிய அல்லது மிகவும் கடுமையான விரிசல்களுக்கு இந்த முறை ஏற்றதல்ல.

 

மேலும் படிக்கவும் : நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பொதுவான வாட்டர்ப்ரூஃபிங் தவறுகள்

 

 

பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் நன்மைகள்



பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் உங்களின் வீட்டை அல்லது கட்டிடத்தை நீர் சேதம் மற்றும் பிற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும் பல நன்மைகளை வழங்குகிறது. பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் சில முக்கியமான பலன்கள் பின்வருமாறு :

 

1) சிறந்த உட்புற சூழல்

உங்கள் பேஸ்மெண்ட்டை வாட்டர்ப்ரூஃபிங் செய்வது ஈரப்பதத்தின் அளவைக் குறைக்கவும், பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும், இது உங்கள் வீடு அல்லது கட்டிடத்தில் ஒட்டுமொத்தக் காற்றின் தரத்தை மேம்படுத்தும்.

 

2) பேஸ்மெண்ட் ஃப்ளோர்களுக்கான பாதுகாப்பு

ஈரப்பதம் காலப்போக்கில் பேஸ்மெண்ட் ஃப்ளோர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், ஆனால் வாட்டர்ப்ரூஃபிங் இந்த சேதத்தைத் தடுக்கவும் உங்கள் ஃப்ளோர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் உதவும்.

 

3) பேஸ்மெண்ட்டில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது

வாட்டர்ப்ரூஃபிங் உங்கள் பேஸ்மெண்ட்டில் நீர் ஊடுருவுவதைத் தடுக்க உதவுகிறது, வெள்ளம் மற்றும் அதன் காரணமாக உங்கள் சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.

 

4) உங்கள் சம்ப் பம்ப்பிற்கான பாதுகாப்பு

உங்களின் பேஸ்மெண்ட்டிலிருந்து தண்ணீரை அகற்ற சம்ப் பம்ப் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அதிகத் தண்ணீர் இருந்தால் அதனால் கையாள முடியாமல் போகக்கூடும். வாட்டர்ப்ரூஃபிங் இதைத் தடுக்கிறது மற்றும் உங்கள் சம்ப் பம்ப்பைச் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

 

5) கட்டமைப்புகளில் ஏற்படும் சேதத்திற்கு எதிரான பாதுகாப்பு

நீர் சேதம் உங்கள் வீடு அல்லது கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதியைப் பாதிக்கலாம், ஆனால் வாட்டர்ப்ரூஃபிங் இந்தச் சேதத்தைத் தடுத்து உங்கள் அஸ்திவாரத்தின் ஆயுளை நீட்டிக்கவும் உதவும்.

 

6) மின்சார கட்டணத்தைக் குறைக்கிறது

பேஸ்மெண்ட் சுவர்களை உட்புறமாக வாட்டர்ப்ரூஃபிங் செய்வதன் மூலம் உங்கள் வீடு அல்லது கட்டிடத்தில் ஈரப்பதத்தின் அளவைக் குறைக்கலாம், இதன் காரணமாக உங்கள் HVAC அமைப்பு சௌகரியமான வெப்பநிலையைப் பராமரிக்கக் கடினமாக உழைக்க வேண்டியதில்லை என்பதால் மின்சாரக் கட்டணம் குறையும்.




மொத்தத்தில், பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இந்த வலைப்பதிவில் அடங்கும். பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்பது நீர் சேதம், பூஞ்சை, மற்றும் கட்டமைப்பு பிரச்சனைகளிலிருந்து உங்களின் வீடு அல்லது கட்டிடத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான படிநிலை ஆகும். ஈரப்பதத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து, சரியான முறையைத் தேர்ந்தெடுத்து, சரியான பேஸ்மெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் செலவை நிர்ணயிப்பதன் மூலம், நீங்கள் உலர்ந்த மற்றும் பாதுகாப்பான பேஸ்மெண்ட்டை உறுதி செய்யலாம். கூடுதலாக, அதன் நன்மைகள் எந்தவொரு வீட்டு உரிமையாளர் அல்லது சொத்து உரிமையாளருக்கும் ஒரு சிறந்த முதலீடாக அமைகின்றன, எனவே உங்கள் வீட்டை எவ்வாறு வாட்டர்ப்ரூஃப் செய்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள்!



தொடர்புடைய கட்டுரைகள்



தொடர்புடைய வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....