Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Product
UltraTech Building Products
Waterproofing Systems
Crack Filler
Style Epoxy Grout
Tile & Marble Fitting System
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
செங்கற்கள் என்பது கான்கிரீட், மணல், சுண்ணாம்பு அல்லது களிமண்ணால் செய்யப்படும் ஒரு வகை கட்டுமானப் பொருள் ஆகும். அவை பொதுவாக சுவர்கள், நடைபாதைகள் மற்றும் பிற வகை கட்டிடக்கலைகளை உருவாக்க பயன்படுகிறது. செங்கற்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அவை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து பல்வேறு வடிவங்கள் மற்றும் வகைகளில் அவற்றை உற்பத்தி செய்யலாம். அவற்றின் உறுதித்தன்மை, வலிமை மற்றும் தீ தடுப்பு ஆகியவற்றின் காரணமாக, அவை பிரபலமான கட்டுமானப் பொருளாகத் தொடர்கின்றன.
வெவ்வேறு வகையான செங்கற்களில் சில இதோ:
இவை ஈரமான களிமண்ணை வைக்கோல் அல்லது பிற இழை அமைப்புகளுடன் கலந்து வடிவமைத்த பின்னர் வெயிலில் காய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. வெயிலில் காய வைக்கப்பட்ட செங்கற்கள் சுடுமண் செங்கற்களைப் போல வலுவானதாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்காது, ஆனால் அவை உற்பத்தி செய்வதற்கு மலிவானவை மற்றும் பொதுவாக தற்காலிக கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த செங்கற்கள் வலுவானவை, நீடித்து உழைக்கக்கூடியவையாகும் மற்றும் இவை பல்வேறு அளவுகள், வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன. இவை, ஈரமான களிமண்ணை வடிவமைத்து, பின்னர் சூளையில் அதிக வெப்பநிலையில் சுடுவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. சுடுமண் செங்கற்களின் கீழ் 4 வெவ்வேறு வகை செங்கற்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை கட்டுமான நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதுவும் குறிப்பாக களிமண் அதிகமாக உள்ள பகுதிகளில். அவற்றில் சில வகைகள் இதோ:
இவை உயர்தரமானதாகும், மேலும், அளவு, வடிவம் மற்றும் நிறத்தில் ஒரே மாதிரியானவையாகும். அவை கூர்மையான விளிம்புகளைக் கொண்டுள்ளன, விரிசல் மற்றும் பிற குறைபாடுகள் இல்லாதவை, மேலும் தட்டும்போது தெளிவான ஒலியை உருவாக்குகின்றன. பொதுவாக பாரம் தாங்கும் கட்டமைப்புகளுக்கும் வெளிப்படும் சுவர்களுக்கும் முதல் தர செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை முதல் தர செங்கற்களைப் போலவே இருக்கும் ஆனால் ஒழுங்கற்ற வடிவங்கள், அளவுகள் அல்லது வண்ணங்கள் போன்ற சிறிய குறைபாடுகளைக் கொண்டிருக்கலாம். அவை பாரம் தாங்கும் சுவர்களுக்கு பொருத்தமானவை, ஆனால் வெளிப்படும் சுவர்களுக்குப் பயன்படுத்தப்படாது.
இவை வடிவம், அளவு மற்றும் நிறத்தில் மிகவும் ஒழுங்கற்றவையாக இருக்கும் மற்றும் கணிசமான விரிசல்கள், சிதைவுகள் மற்றும் பிற குறைபாடுகளைக் கொண்டிருக்கும். அவை பாரம் தாங்கும் கட்டமைப்புகளுக்கு ஏற்றதல்ல, மேலும் அவை பெரும்பாலும் தோட்ட சுவர்கள் அல்லது நில அழகு வேலை போன்ற கட்டமைப்பு அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இவை அதிகமாக சுடப்பட்ட அல்லது குறைவாக சுடப்பட்ட தரம் குறைந்த செங்கற்களாகும். விரிசல்கள், சிதைவுகள் மற்றும் பிற குறைபாடுகள் இருப்பதால் அவை எந்தவொரு கட்டுமான நோக்கங்களுக்கும் பொருந்தாது.
இவை ஃப்ளை ஆஷ் (நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் கழிவுப் பொருள்), சிமென்ட் மற்றும் நீர் ஆகியவற்றைக் கலந்து, பின்னர் கலவையை அச்சுகளுக்குள் அழுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவை பாரம்பரியமான களிமண் செங்கற்களுக்கான செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மாற்றாகும் மற்றும் பொதுவாக பாரம் தாங்கும் கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இவை சிமென்ட், மணல் மற்றும் தண்ணீரைக் கலந்து, பின்னர் கலவையை அச்சுகளில் ஊற்றுவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அவை வலுவானவை, நீடித்து உழைக்கக்கூடியவை, நெருப்பு மற்றும் வானிலையால் பாதிக்கப்படாதவை. இந்த செங்கற்கள் பொதுவாக பாரம் தாங்கும் கட்டமைப்புகளுக்கும், நடைபாதைத் தொகுதிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இவை கட்டமைப்பு பயன்பாடுகளில் பயன்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உயர்தர களிமண்ணிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, அவை மிக அதிக வெப்பநிலையில் சுடப்படுவதால், அவை வலுவானதாகவும், அடர்த்தியானதாகவும், நீர் மற்றும் இரசாயனங்களால் பாதிக்கப்படாததாகவும் உள்ளன. இந்த வகை செங்கற்கள் பொதுவாக, அதிக பாரத்தைத் தாங்க வேண்டிய அல்லது நீர் எதிர்ப்பு தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இவை மணல் மற்றும் சுண்ணாம்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவற்றின் வலிமை, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் தீ எதிர்ப்பு ஆகியவற்றிற்கு பெயர்போனதாகும். அவை இலகுவாகவும், நல்ல காப்பு பண்புகளையும் கொண்டுள்ளன, அவை உயரமான கட்டிடங்களில் அல்லது வெப்ப காப்பு தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.
இந்த வகை செங்கற்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதம் மற்றும் பிற கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவை பாரம்பரியமான செங்கற்களுக்கு பதிலாகச் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மாற்றாகும், மேலும் அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை காரணமாக அவை பிரபலமடைந்து வருகின்றன. அவை பொதுவாக தோட்ட சுவர்கள், நில அழகு வேலை அல்லது அலங்கார அம்சங்கள் போன்ற கட்டமைப்பு அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
செங்கற்களை அவற்றின் அளவு, நிறம், அமைப்பு மற்றும் தட்டும்போது எழும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு அடையாளம் காணலாம். செங்கற்களை அடையாளம் காண உதவும் சில வழிமுறைகள் பின்வருமாறு:
செங்கற்கள் பல்வேறு அளவுகளில் வருகின்றன, ஆனால் மிகவும் பொதுவான அளவு 8.5 அங்குலம் x 4.25 அங்குலம் x 2.75 அங்குலம் (215 மிமீ x 102.5 மிமீ x 65 மிமீ) ஆகும். செங்கலின் அளவை தீர்மானிக்க நீங்கள் அதை அளவிடலாம்.
செங்கற்கள் சிவப்பு, பழுப்பு, சாம்பல் மற்றும் கிரீம் உட்பட பல்வேறு நிறங்களில் வருகின்றன. செங்கல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள், சுடும் செயல்முறை மற்றும் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சேர்க்கை பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்து அதன் நிறம் இருக்கலாம்.
செங்கற்கள் அவற்றின் நோக்கத்தைப் பொறுத்து வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டிருக்கலாம். பாரம் தாங்கும் சுவர்களுக்குப் பயன்படுத்தப்படும் செங்கற்கள் மென்மையான மேற்பரப்பு மற்றும் கூர்மையான விளிம்புகளைக் கொண்டிருக்கும், அதே சமயம் அலங்கார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் செங்கற்கள் கடினமான அமைப்பு அல்லது வடிவத்தைக் கொண்டிருக்கும்.
தட்டும்போது, உயர்தர செங்கல் தெளிவான ரிங்கார ஒலியை உண்டாக்கும். செங்கல் மந்தமான ஒலியை உண்டாக்கினால், அது தரம் குறைந்ததாக அல்லது சேதமடைந்ததாக இருக்கலாம்.
செங்கற்களின் கடினத்தன்மை தேய்மானத்தை தாங்கும் அவற்றின் திறனை தீர்மானிக்கிறத. அதிக கடினத்தன்மை கொண்ட செங்கற்கள் நீடித்து உழைக்கும் மற்றும் நீடித்து நிலைக்கும்.
இது செங்கற்களின் இறுக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் திறன் ஆகும். சுவரின் பாரம் தாங்கும் திறனை தீர்மானிக்க இது ஒரு முக்கிய காரணியாகும். செங்கற்கள் மீது இறுக்க வலிமை சோதனை எனப்படும் சோதனையைப் பயன்படுத்தி அவற்றின் இறுக்க வலிமை சோதிக்கப்படும்.
உறிஞ்சும் தன்மை என்பது செங்கற்களின் தண்ணீரை உறிஞ்சும் திறனைக் குறிக்கிறது. குறைவான உறிஞ்சும் விகிதங்களைக் கொண்ட செங்கற்கள் கட்டுமான நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமானவை, ஏனெனில் அவற்றின் மேல் தண்ணீர் படும்போது விரிசல் அல்லது பலவீனமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு.
செங்கற்களின் வெப்ப கடத்துத்திறன் என்பது அவற்றின் வெப்பத்தை கடத்தும் தன்மையைத் தீர்மானிக்கிறது. குறைந்த வெப்ப கடத்துத்திறன் கொண்ட செங்கற்கள் வெப்ப காப்பு நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமானவை, ஏனெனில் அவை ஒரு கட்டிடத்திற்குள் சீரான வெப்பநிலையை பராமரிக்க உதவும்.
கரையக்கூடிய உப்புகளின் காரண்மாக செங்கற்களின் மேற்பரப்பில் வெண்மையாக படிந்திருப்பது போல் தோன்றுவது நீறுபூத்தல் ஆகும். இது நிறச் சிதைவை ஏற்படுத்தி செங்கலை வலுவிழக்கச் செய்யும்.
கார எதிர்ப்பு என்பது சிமென்ட் போன்ற காரப் பொருட்களின் விளைவுகளை எதிர்க்கும் செங்கற்களின் திறன் ஆகும். அதிக கார எதிர்ப்புத்திறனைக் கொண்ட செங்கற்கள் இந்த பொருட்கள் படும்போது சிதைவதற்கு அல்லது சேதமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.
மொத்தத்தில், செங்கற்களின் பண்புகளைப் புரிந்துகொள்வது, அவை அவற்றின் பயன்பாட்டு நோக்கத்திற்கு ஏற்றதாக இருப்பதையும், காலப்போக்கில் சிறப்பாக செயல்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானதாகும். இறுக்க வலிமை சோதனை போன்ற சோதனைகளை செங்கற்களின் மீது செய்வது, அவற்றின் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைக் கண்டறிய உதவும்.
செங்கற்களைப் பயன்படுத்தி கட்டிடம் கட்டுவது பல நூற்றாண்டுகளாக உள்ள ஒரு பிரபலமான கட்டுமான முறையாகும். செங்கற்கள் அவற்றின் வலிமை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் தீ மற்றும் வானிலைக்கு எதிர்ப்பு திறன் உள்ளிட்டவற்றுக்கு பெயர்போனதாகும். செங்கற்களை பரிசோதிப்பதன் மூலம், பில்டர்கள் தாங்கள் கட்டும் கட்டமைப்புகள் பாதுகாப்பானதாகவும், நீடித்து உழைப்பதாகவும், தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதாகவும் இருப்பதை உறுதி செய்யலாம். செங்கற்களை சோதனை செய்ய பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது தண்ணீரை உறிஞ்சும் தன்மை, இறுக்க வலிமை மற்றும் பலவற்றை நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். இந்த சோதனைகள் வெவ்வேறு கட்டுமான நோக்கங்களுக்கு செங்கற்களின் பொருத்தமானதா என்று தீர்மானிக்க உதவுகின்றன மற்றும் இதன் மூலம் கட்டிடம் கட்டும் செயல்முறையில் அதிக செலவை ஏற்படுத்தும் தவறுகளைத் தடுக்கலாம்.