Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Product
UltraTech Building Products
Waterproofing Systems
Crack Filler
Style Epoxy Grout
Tile & Marble Fitting System
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
புதிதாக கலந்த கான்கிரீட்டில் கலந்த பொருட்கள் தனித்தையே பிரிவதை கான்க்ரீட் செக்ரிகேஷன் (பிரிதல்) என்கிறோம். புவியீர்ப்பு விசையின் காரணமாக சரளை கற்கள் போன்ற கனமான பொருட்கள் கீழே சேகாரமாகி, லேசான சிமெண்ட் மற்றும் நீர் கலவை மேலேயே நிற்பதால் செக்ரிகேஷன் ஏற்படுகிறது. கான்கிரீட் கலவை சரியாக கலக்கப்படாதபோது அல்லது அதிக தண்ணீரில் சிமெண்ட் கலந்திருந்தால் அங்காங்கே ஒரு சில இடங்களில் அதிக சிமெண்ட் அல்லது தண்ணீரைக் கொண்டிருக்கும் போது செக்ரிகேஷன் ஏற்படலாம்..
கான்கிரீட்டில் ஏற்படக்கூடிய இரண்டு முதன்மையான செக்ரிகேஷன்கள்:
இது கான்கிரீட் கலவையில் உள்ள கனமான சரளை கற்கள் சிமெண்ட் மற்றும் நீர் கலவையிலிருந்து பிரிந்து கீழே தங்கி கலவை சீரற்றதாக மாறும் போது நிகழ்கிறது. கான்க்ரீட் கலவையினை எடுத்து செல்லும் போது அல்லது கான்கிரீட் ஊற்றும்போது செக்ரிகேஷன் நிகழலாம்.
இந்த வகை செக்ரிகேசன் சீரற்ற வகையில் கான்க்ரீட் போடப்படும் போது தண்ணீர் மற்றும் சிமெண்ட் தனித்தனியே பிரிந்து விடுவதால் ஏற்படுகிறது இது பொருத்தமற்ற மிக்சர்களின் பயன்பாடு, போதுமான நேரம் கலக்காமல் இருத்தல் அல்லது தவறான அளவில் நீர்-சிமென்ட் கலப்பதால் ஏற்படலாம்..
இரண்டு வகையான செக்ரிகேசனிலும் வெற்றிடம் உருவாகுதல், வலுவிழந்த கான்கிரீட் மற்றும் கட்டுமானத்தினை நீடித்துழைக்கும் திறன் குறைதல் போன்ற குறிப்பிடத்தக்க சிக்கல்கள் ஏற்படலாம். முறையான கையாளுதல், கலவையினை உரிய இடத்திற்கு கொண்டு செல்லுதல் மற்றும் கான்கிரீட் கலவை பயன்பாடு ஆகியவை இந்த வகையான செக்ரிகேசன்களைத் தடுக்க உதவும்.
கான்கிரீட் செக்ரிகேஷனை பாதிக்கும் பல காரணிகள் மற்றும் காரணங்கள் உள்ளன.
கான்கிரீட் கலவையில் உள்ள பொருட்களின் அளவு விகிதம் ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், செக்ரிகேஷன் ஏற்படலாம். அதிக அளவு நீரில்-சிமென்ட் சேர்த்த கலவை விகிதமானது, நீரின் அதிக எடையின் காரணமாக எடை மிக்க பொருட்களை கீழே கொண்டு சேர்த்துவிடும்.
கான்கிரீட் முழுமையாக கலக்கப்படாவிட்டால், கலவையின் சில பகுதிகளில் சில பொருட்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், இது செக்ரிகேஷனை ஏற்படுத்திடும்.
கான்கிரீட் கலவையின் தவறான கையாளுதலும் செக்ரிகேஷனை ஏற்படுத்தும். நீங்கள் கான்கிரீட்டை கைமுறையாக கலக்கினால், கலவை உருவாக்குவதில் சீரற்ற தன்மை இருக்கலாம், இது செக்ரிகேஷனை ஏற்படுத்தும்.
கான்கிரீட் செக்ரிகேஷன் ஏற்படுவதற்கு கான்கிரீட் இடப்படும் இடத்திற்கு கலவையினை கொண்டு செல்லும் முறை மிகப்பெரிய காரணமாக உள்ளது. கான்கிரீட் கலவை வைக்கப்படும் விதம் முக்கியமானது. கான்கிரீட் உயரத்தில் இருந்து ஊற்றப்பட்டாலோ அல்லது நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலோ, அதில் கனமான பொருட்கள் ஒன்று சேர்ந்து, மீதமுள்ள கலவையிலிருந்து தனியே பிரிந்து விடக் கூடும்.
பொதுவாக கான்கிரீட்டில் இருந்து காற்று அடைப்புகளை ஒன்று சேர்க்கவும் அகற்றவும் அதிர்வு முறை பயன்படுத்தப்படுகிறது, அதிகப்படியான அதிர்வுகள் செக்ரிகேஷனை ஏற்படுத்தலாம், இதன் மூலம் கனமான பொருட்களை அடியில் சேர்ந்து மீதமுள்ள கலவையிலிருந்து பிரிந்து விடக் கூடும்.
கான்கிரீட்டில் செக்ரிகேஷன் பல விளைவுகளை ஏற்படுத்தலாம், அவை:
கான்கிரீட் கலவை செக்ரிகேட் ஆகும் போது, வெற்றிடங்கள் உருவாகலாம், இது கான்கிரீட்டின் ஊடுருவும் திறனை அதிகரிக்கும். இது கான்கிரீட்டில் நீர் ஊடுருவலை எளிதில் பாதிக்க செய்வதோடு, இது சிமெண்டின் வலுவூட்டல் மற்றும் கார்பனேற்றத்தின் அரிப்புக்கும் வழிவகுக்கும்.
Segregation can also lead to the formation of cracks in the concrete, which can significantly reduce the durability and lifespan of the structure. These cracks can occur due to the uneven distribution of the aggregates and can result in a weaker and less stable structure.
செக்ரிகேஷன் கான்கிரீட்டில் விரிசல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும், இது கட்டமைப்பின் நிலைத்து நிற்கும் திறன் மற்றும் ஆயுளை பாதித்து குறைக்கும். கான்கிரீட் கலவையின் சீரற்ற பயன்பாடு காரணமாக இந்த விரிசல்கள் ஏற்படலாம் மற்றும் பலவீனமான, திடமற்ற கட்டமைப்பை உருவாக்க நேரலாம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், செக்ரிகேஷன் கான்கிரீட்டின் கட்டமைப்பின் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம், கான்கிரீட் கலவையினை கலக்குதல், இடம் மாற்றுதல் மற்றும் கான்கிரீட் இடும் இடங்களில் செக்ரிகேஷன் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கான்கிரீட் செக்ரிகேஷனை தடுக்க சில வழிகள் உள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கான்கிரீட் செக்ரிகேஷனை தடுக்கலாம், இறுதி கலவை உயர் தரம், நீடித்த நிலைக்கும் மற்றும் உழைக்கும் தரத்தினை உறுதிப்படுத்துகிறது.
கற் ஜல்லிகள், சிமெண்ட், நீர் மற்றும் பிற கலவைகளின் விகிதம் துல்லியமாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டும். தண்ணீர்-சிமென்ட் கலக்கும் அளவானது எந்த வகையான கான்கிரீட் கலக்கப்படுகிறதோ அதற்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
அனைத்து பொருட்களும் ஒரே மாதிரியாக சீராக கலப்பதை உறுதி செய்ய கான்கிரீட் முழுமையாக கலக்கப்பட வேண்டும். போதுமான நேரம் கலக்க வேண்டும் மற்றும் பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
கான்கிரீட் செக்ரிகேஷனை தடுக்க கான்கிரீட் எடுத்து செல்லும் போதும் மற்றும் பயன்படுத்தும் போதும் கவனமாகக் கையாள வேண்டும். பொருத்தமான உபகராணத்தை பயன்படுத்துவதும் கைகளால் கலவையினை கலக்காமல் இருப்பதும் செக்ரிகேஷன் ஏற்படுவதை தவிர்க்கும்.
அதிர்வு என்பது கான்கிரீட் அமைப்பதில் ஒரு முக்கியமான படியாகும், மேலும் இது கான்கிரீட்டை ஒருங்கிணைக்கவும், சிக்கியுள்ள காற்றை அகற்றவும் உதவுகிறது. ஃபார்ம்வொர்க் முழுவதும் கான்கிரீட் ஒரே சீராக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், போதுமான அதிர்வால் செக்ரிகேஷனை தடுக்கலாம்.
வெற்றிடங்களை உருவாக்குவதைத் தடுக்க கான்கிரீட் கவனமாக ஊற்றப்பட வேண்டும், தவறாக ஊற்றப்படுவதால் செக்ரிகேஷன் ஏற்படலாம். கான்கிரீட் அடுக்குகளாக வைக்கப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு அடுக்கும் போதுமான அளவு கெட்டிப்படுத்தப்பட (காம்பேக்ட்) வேண்டும்.
கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் தரம், ஆயுள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கான்கிரீட் செக்ரிகேஷனை தடுப்பது மிகவும் முக்கியம். செக்ரிகேஷன் மொத்தப் பொருட்களின் சீரற்ற விநியோகத்திற்கு வழிவகுக்கும் இதனால் பலவீனமான கட்டமைப்பு பகுதிகள், விரிசல்கள் மற்றும் குறைக்கப்பட்ட சுமை தாங்கும் திறன் (லோட் பியரிங் கெபாசிட்டி), இறுதியாக ஒட்டுமொத்த கட்டுமானமும் மோசமடையும் சூழலுக்கு வழிவகுக்கும். மேலும், இது ஊடுருவலை அதிகரிக்கலாம், கான்கிரீட்டை அரிப்பு, கார்பனேற்றம் மற்றும் பிற சேதங்களை ஏற்படுத்தக் கூடும். கட்டுமானத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்து, கான்கிரீட் செக்ரிகேஷனை தடுக்க சரியான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.