Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost


Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


உங்கள் வீட்டின் சுவர்களை மாற்றுவதற்கான பெயிண்டிங் குறிப்புகள்

கடைசியாகக் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்தாலும், வீட்டைப் பெயிண்ட் செய்வதென்பது ஒட்டுமொத்த வீட்டையும் அழகுபடுத்தும் செயல்முறையின் ஒரு ஒரு முக்கியமான பகுதி ஆகும். வீட்டைப் பெயிண்ட் செய்வதற்கான உதவிக்குறிப்புகள் உங்களின் வீட்டைத் திறம்படப் பெயிண்ட் செய்வதற்கான உங்களின் வழிகாட்டி ஆகும்.

Share:


நீங்கள், சிமெண்ட் முதல் கான்கிரீட்டின் இறுக்க வலிமை வரை வீட்டைப் புதுப்பிக்கும் பயணத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தால், வீட்டைப் பெயிண்ட் செய்வதிலும் ஆர்வம் கொள்ள விரும்பினால், வீட்டைப் பெயிண்ட் செய்வதற்கான சில நல்ல உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்கி உதவுகிறோம், அது நீங்கள் சரியான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதையும், உங்களின் பெயிண்ட் நீடித்து உழைப்பதையும் உறுதி செய்கின்றன. வீட்டைப் பெயிண்ட் செய்வதற்கான இந்த வழிகாட்டியானது பெயிண்ட் செய்வதற்கான உதவிக்குறிப்புகள் முதல் சுவர்களைப் பெயிண்ட் செய்வதற்கான செய்முறை நுட்பங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆரம்பிப்போம்!




நீடித்து உழைக்கும் பெயிண்ட்டிற்கான வீட்டைப் பெயிண்ட் செய்வதற்கான வழிகாட்டி



  • 1. வானிலையைக் கருத்தில் கொண்டு, சுவரின் ஈரத்தன்மையைச் சரிபார்த்தல் :
 

    நீங்கள் ஒரு டைம்லைனை செட் செய்து உங்களின் வீட்டை மறுசீரமைக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், முதல்முறையாக நீங்களே வீட்டைப் பெயிண்ட் செய்கிறீர்கள் என்றால் அதற்குப் போதுமான நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யவும். மேலும், உங்களின் நாட்டில் கோடை காலம் அல்லது குளிர் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும் ஏனெனில் மழைகாலத்தில் பெயிண்ட் உலராது. உங்களின் சுவர்களைப் பெயிண்ட் செய்வதற்குக் கோடை காலம் சிறந்த நேரமாகும்.


    மாய்ஸ்சர் மீட்டர் என்பது சுவரில் உள்ள ஈரப்பதத்தை அளப்பதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சாதனமாகும்.

    இந்தச் சாதனத்தால் கான்கிரீட் தரைகள், சுவர் மற்றும் சீலிங்களில் நீர் கசிவுள்ள கூரை, சேதமடைந்த குழாய்கள், மழை நீர் அல்லது நிலத்தடி நீர்க்கசிவால் ஏற்படக்கூடிய ஈரப்பதத்தைக் கண்டறிய முடியும். மாய்ஸ்சர் மீட்டரின் அறிவியல் ரீதியான துல்லியமான கண்டறிதல் திறனானது, ஈரத்தன்மையால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட உங்களுக்கு உதவும், அதனால் பெயிண்ட் செய்வதற்கு முன் வீட்டின் சுவர்கள் மற்றும் கூரையில் நீர்க்காப்பு செய்ய நீங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம்.
     

  • 2. பெயிண்ட் செய்வதற்கு முன் மேற்பரப்பைச் சுத்தம் செய்யவும் :

 

    சுவர்களை நீங்கள் பெயிண்ட் செய்வதற்கு முன் அதன் மேற்பரப்பு அழுக்காக இருக்கக் கூடாது. உங்களின் சுவர்களில் எதாவது தூசி/ஒட்டடைகள் இருந்தால், பெயிண்ட் செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் அவற்றைச் சுத்தம் செய்வது நல்லது. மேற்பரப்பில் உங்களால் எதையும் பார்க்க முடியவில்லை என்றாலும் கூட, நீங்கள் பெயிண்ட் செய்யும்போது எதாவது இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அதைச் சுத்தம் செய்வது நல்லதாகும்.

  • 3. ப்ரீமியம் தரத்திலான கருவி மற்றும் பெயிண்ட்டில் முதலீடு செய்யவும் :

 

    நீடித்து உழைக்கும் பெயிண்ட்டிற்கான இந்தப் பெயிண்டிங் உதவிக்குறிப்புகளைப் படிப்பது, எப்போதும் அனைத்தையும் நீங்கள் மீண்டும் செய்யவேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்காகும். இதற்காக உயர்தரமான பெயிண்டிலும், ப்ரஷ்கள், ரோலர் கவர்கள் மற்றும் பெயிண்டரின் டேப் போன்ற பெயிண்டிங் கருவிகளிலும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். நல்ல ப்ரஷ்களும் ரோலர் கவர்களும் நல்ல கவரேஜை வழங்குகின்றன அதனால் மீண்டும் பூசுவதில் நேரத்தையும் பெயிண்டையும் நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள், மற்றும் நல்ல பெயிண்டர் டேப் ட்ரிப்களையும் ப்ளர்களையும் உங்களால் சீல் செய்ய முடியும் என்பதை உறுதி செய்கின்றது.

  • 4. ப்ரைமரைத் தவிர்க்காதீர்கள் :

 

    புதிய உலர்வான சுவரில் நீங்கள் பெயிண்ட் செய்கிறீர்கள் என்றால், ஒழுங்கற்ற இடங்களை மறைக்கத் தண்ணீர் அடிப்படையிலான ப்ரைமரைப் பயன்படுத்தவும் மற்றும் வண்ணம் பூசுவதற்கு முன் சமமான தளத்தை ஏற்படுத்தவும். பேனலிங் சுவர்கள், தண்ணீரால் சேதமடைந்த, அல்லது புகை நிறைந்த சுவர்களை நீங்கள் பெயிண்ட் செய்கிறீர்கள் என்றால், எண்ணெய் அடிப்படையிலான ப்ரைமரைத் தேர்ந்தெடுக்கவும்.

  •  5. முழுவதும் ஒரே மாதிரியான வண்ணத்தில் இருப்பதற்காக ஒரு பெரிய பக்கெட்டில் பல கேன்களில் உள்ள பெயிண்ட்டைக் கலக்கவும் :

 

    கேனுக்குக் கேன் பெயிண்ட்டின் வண்ணம் கொஞ்சம் மாறுபடும், அதனால் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக இருப்பதைத் தவிர்க்க, கேன்களை ஒரு பெரிய பக்கெட்டில் கலந்து, அதிலிருந்து பெயிண்ட்டைப் பயன்படுத்துவது நல்லது. தேவைப்படும் பெயிண்ட்டின் அளவை மதிப்பிட வேண்டும் என்று எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அதன்படி, 'பாக்ஸிங்' எனப்படும் இந்தச் செயல்முறையைத் தொடரவும்.

  • 6. லாப் மார்க்குகளைத் தவிர்க்கவும் :
 


    ஏற்கனவே உலரத் தொடங்கிய பெயிண்ட்டின் மீது ரோலரைப் பயன்படுத்திப் பெயிண்ட் செய்வதால் ஏற்படும் ஸ்ட்ரைப் மார்க்குகளைத் தவிர்க்க, சுவரின் முழு உயரத்திற்கும் பெயிண்ட் செய்துவிட்டு, கொஞ்சம் நகர்த்தி முந்தைய ஸ்ட்ரோக்கின் மீது அடுத்த ஸ்ட்ரோக் இருக்கும்படி செய்யவும்.

     

  • 7. ட்ரிம்மை முதலில் பெயிண்ட் செய்யவும் :
 

    தொழில்முறையினர் வழக்கமாக ஒரு வரிசையைப் பின்பற்றுவார்கள். அவர்கள் முதலில் ட்ரிம்களைப் பெயிண்ட் செய்வார்கள், பிறகு சீலிங்கள் மற்றும் பிறகு சுவர்களைப் பெயிண்ட் செய்வார்கள். ஏனெனில், சுவர்களில் டேப் ஒட்டுவதை விடவும் ட்ரிம்களைப் பெயிண்ட் செய்வது எளிதானதும் வேகமானதுமாகும். ட்ரிம்மைப் பெயிண்ட் செய்யும்போது, அது குறையில்லாததாக இருக்க வேண்டியதில்லை, மரத்தில் ஒரு சீரான ஃபினிஷ் தான் வேண்டும்.

  • 8. சீரான ஃபினிஷிற்காக பூச்சுகளுக்கு இடையில் ட்ரிம்மைச் சாண்ட் செய்ய வேண்டும் :
 

    கீழே உள்ள வண்ணத்தைப் பெயிண்டின் ஒரு பூச்சு மறைத்து ட்ரிம்மின் மீது பளபளக்க வாய்ப்பில்லை. மற்றும் பூச்சுகளுக்கு இடையில் நீங்கள் சாண்ட் செய்யவில்லை என்றால், ஃபினிஷ் கிரெயின் நிறைந்த டெக்ஸ்சரைக் கொண்டிருக்கும். சீரான ஃபினிஷிற்காக, பெயிண்டின் ஒவ்வொரு பூச்சைப் பூசுவதற்கு முன்பும் ட்ரிம்மைச் சாண்ட் செய்ய வேண்டும்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. பழைய பெயிண்ட்டிற்கு மேல் நீங்கள் நேரடியாகப் பெயிண்ட் செய்யலாமா?

 

பழைய பெயிண்ட்டும் புதிய பெயிண்ட்டும் இரசாயன ரீதியாக ஒரே மாதிரியாக இருந்தால் (உதாரணத்திற்கு, எண்ணெய் அடிப்படையிலானது) உங்களுக்குப் ப்ரைமர் தேவைப்படாது. தற்போதைய சுவர் சீராகவும் சுத்தமாகவும் இருந்தால், பழைய பெயிண்ட்டிற்கு மேல் புதிய பெயிண்ட்டை நீங்கள் நேரடியாகப் பயன்படுத்தலாம்.

 

2. நீங்கள் பூச வேண்டிய குறைந்தபட்ச பெயிண்ட் பூச்சு என்ன?

 

குறைந்தபட்சம் இரண்டு பெயிண்ட் பூச்சுகளைப் பூச வேண்டும் என்பது விதி ஆகும். எனினும், சுவரின் மெட்டீரியலும், முந்தைய வண்ணமும், இந்த எண்ணிக்கையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றன, உதாரணத்திற்கு, ஃபினிஷ் செய்யப்படாத உலர்ந்த சுவருக்கு, ப்ரைமர் பூச்சு அல்லது அண்டர்கோட் பெயிண்ட்டும் உங்களுக்குத் தேவைப்படும்.

 

3. நீங்கள் பெயிண்ட் செய்வதற்கு முன் உங்களின் சுவரில் ப்ரைமர் பூசவில்லை என்றால் என்ன ஆகும்?

 

நீங்கள் ப்ரைமரைத் தவிர்த்தால், உங்களின் பெயிண்ட் உரிவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது, குறிப்பாக ஈரப்பதமான நிலைமைகளில். மேலும், ஒட்டும் தன்மை இல்லாததால், பெயிண்ட் உலர்ந்து பல மாதங்கள் கழித்துச் சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். அழுக்கு அல்லது கைரேகைகளை நீங்கள் சுத்தம் செய்ய முயற்சி செய்யும்போது பெயிண்ட் உரிவதை நீங்கள் பார்க்கக்கூடும்.




இந்த பெயிண்டிங்குறிப்புகள் அனைத்தும் பெயிண்டிங் செயல்முறையை நீங்களே மேற்கொள்ள உங்களைத் தூண்டியிருந்தால், தொடங்குவதட்ற்கு முன் இந்தக் கட்டுரையைப் படிக்க பரிந்துரைக்கிறோம்: வெளிப்புறச் சுவர்களுக்கான கலர்



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....