Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost


Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


ஃப்ளோர் ஸ்க்ரீட் என்றால் என்ன? அதன் வகைகள், பொருட்கள், மற்றும் பயன்பாடுகள்.

ஃப்ளோர் ஸ்க்ரீட் வழிகாட்டியின் மூலமாக ஒரு வழுவழுப்பான ஒரே சமதளமான தரையை உருவாக்குங்கள். பிணையாத அல்லது பிணையும் ஸ்க்ரீட்களுக்கு அதன் வகைகள், பொருட்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றி உங்கள் திட்டத்திற்கு சிறந்ததென நீங்கள் கருதுவதை தேர்வு செய்யக் கொடுக்கிறோம்.

Share:


ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை நடைமுறை பெரும்பாலானோருக்கு அடிப்படை அறிவாகும். இருந்த போதிலும் நினைவில் வைக்கவும் படிப் படியாக செயல்படுத்தவும் அனேக பிற விவரங்கள் இருக்கின்றனன் என்று பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

உதாரணத்திற்கு, உங்கள் இல்லத் தரை ஒரு சாதரணமான சமதளம் என்று பார்க்கும்போது தோன்றும். ஆனால், தளம் உறுதியாக, நீண்டு உழைக்க அனேக விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நடைமுறைதான் ஃப்ளோர் ஸ்க்ரீடிங்

வேலையிடங்கள் அல்லது வீட்டுத் திட்டங்களில் தரைகள் அமைப்பதில் ஸ்க்ரீட் லேயர் நிறுவுவது ஒரு குறிப்பிடத்தக்க வேலையாகும். இந்த வேலைக்கு இதைப் பற்றிய முன் அறிவும் தேவையான சாதனங்களும் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய சவால்தான் .

ஃப்ளோர் ஸ்க்ரீடிங் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள ஆரம்பிப்போம்



கட்டுமானத்தில் ஃப்ளோர் ஸ்க்ரீடிங்

ஒரு ஃப்ளோர் ஸ்க்ரீடிங் அமைக்க மணலும் சிமண்ட்டாலான பொருட்களும் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தில் கலக்கப்படுகின்றன, அது ஒரு ஒரு சம தளமான ஒரு தளத்தை அமைக்கப் பயன்படுகிறது அது ஃப்ளோர் ஸ்க்ரீட் உடன் சேர்க்கப்படுகிறது. சில சமயங்களில் போர்ட்லான்ட் சிமன்ட் அதிக வலு, நீண்ட உழைப்பு, நீரால் மற்றும் உஷ்ணத்தினால் வெடிப்பு ஏற்படாமல் தடுக்க மற்றும் சிறந்த பிணைப்பு ஏற்பட பயன்படுத்த்தப்படுகிறது,

ஃப்ளோர் ஸ்க்ரீட் தரை சிறப்பாக அமைய அடித்தளமாக இருக்கிறது மேலும் அது எப்படி செயல்படுகிறது என்பதில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்துகிறது.

சிமென்ட் மணல் கலவையைப் பூசுவது ஸ்க்ரீடிங்கில் ஈடுபடுவது போல் தோன்றினாலும், அது உண்மையில் பலவற்றை உள்ளடக்கியது. இது மிக முக்கியமான தரை நடைமுறைகளில் ஒன்றாகும் மற்றும் ஒட்டுமொத்த தரையின் தரம், பூச்சு மற்றும் ஆயுள் ஆகியவற்றிற்கு அவசியம்.
 

ஃப்ளோர் ஸ்க்ரீடிங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள்



ஃப்ளோர் ஸ்க்ரீடிங் அமைக்க சிமண்ட், சுத்தமான மணல் மற்றும் தண்ணீர் ஆகியவை குறிப்பிடத்தக்க பொருட்களாகும். கட்டுமானத்தில் பல்வேறு விதமான மணல்கள் பயன்படுத்தப்படுகின்றன.. நீங்கள் உங்களது தேவைக்கேற்ப சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பது ஸ்க்ரீடிங்க்கு ஒரு முக்கியமான உட்கூறு ஆகும்.

மேலும் பாலிமர் பொருட்கள், உலோக வலை அல்லது கண்ணாடி சேர்மானங்கள் ஸ்க்ரீடை வலுப்படுத்த பயன்படுத்தப் படும் சேர்மானங்கள் ஆகும்.

அல்ட்ராடெக்ஃப்ளோர்க்ரீட் என்பது ஒரு பாலிமர் மேம்படுத்தப்பட்ட சிமண்ட், விஷேசமாக பலநோக்கு ஃப்ளோர் ஸ்க்ரீடிங் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இது சிறப்பாக மொட்டை மாடிகள், இல்லங்கள் மற்றும் அலுவலக கட்டிட தரைகள், மற்றும் வணிக நோக்கு திட்டங்கள் போன்றவைகளில் டைல்ஸ் பசைகளுக்கு அடித்தளப் பொருளாக பொருந்துகிறது.
 

ஃப்ளோர் ஸ்க்ரீட்களின் வகைகள்



தரையின் தேவைகள், பயன்பாடுகள் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில், முக்கியமாக நான்கு வகையான ஃப்ளோர் ஸ்கிரீட்களை நீங்கள் காணலாம்

 

1பிணைக்கப்படாதவை

பெயர் குறிப்பிடுவது போல, பிணைக்கப்படாத ஸ்கிரீட்கள் நேரடியாக அடித்தளத்துடன் பிணைக்கப்படவில்லை. மாறாக, அவை கான்கிரீட் தளத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள பாலித்தீன் / ஈரம் புகாத மென்படலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

50 மிமீக்கும் அதிகமான ஸ்டாண்டர்ட் ஸ்க்ரீட் தடிமனை நீங்கள் தேடினால், இது உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும். மெல்லிய பயன்பாடுகளுக்கு சில மாற்றியமைக்கப்பட்ட கான்கிரீட் ஸ்கிரீட்களும் உள்ளன.

2 பிணைக்கப்பட்டவை

கான்கிரீட் அடி மூலக்கூறுடன் பிணைப்பைக் குழம்பச் செய்வதன் மூலம், இந்த வகை கான்கிரீட் ஸ்கிரீட்டை அடி மூலக்கூறுடன் பிணைக்கிறீர்கள். அதிக சுமை எதிர்பார்க்கப்படும் மற்றும் மெல்லிய பயன்பாடு தேவைப்படும் சூழ்நிலைகளில் இது சிறப்பானது.

பிணைந்த ஸ்க்ரீட் தடிமன்கள் 15 மிமீ. முதல் 50 மிமீ வரை ஆகும்.

3. மிதப்பவை

இந்த நவீன நாட்களில் தரை கட்டுமானத்தில் ஒரு காப்பு பயன்படுத்துவது போக்காக இருக்கிறது. இதற்கு நன்றி, மிதக்கும் ஸ்க்ரீட்க்கான தேர்வுக்கு இப்போது அதிக டிமான்ட்.

ஒரு மிதக்கும் ஸ்கிரீட் பொதுவாக காப்பு அடுக்கின் மேல் பயன்படுத்தப்படுகிறது, அதன் மேல் ஒரு ஸ்லிப் சவ்வு ஸ்க்ரீடில் இருந்து காப்பை பிரிக்கிறது. இந்த சீட்டு சவ்வு பொதுவாக பாலித்தீன் தாள், காப்பு மற்றும் ஸ்கிரீட்டை தனித்தனியாக பிரித்து வைக்கும்.

4.வெப்பமூட்டியவை

வெப்பமூட்டிய ஸ்க்ரீட்கள் உங்கள் தரைக்கு கீழே வெப்பமூட்டும் முறைகளுக்கு சிறந்த தீர்வை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் அவை இயற்கையில் ஓடக்கூடியவை. மணல் மற்றும் கான்கிரீட் தரை ஸ்கிரீட்களுடன் ஒப்பிடுகையில் அவை சில குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளன.

ஓடும் தன்மையுள்ள வெப்பமூட்டிய ஸ்க்ரீட்களின் சிறப்புகள் அவை தரைக்கு கீழே உள்ள வெப்பமூட்டும் குழாய்களுக்கு முழு பாதுகாப்பையும் கொடுக்கின்றன.


தரைக்கு ஸ்க்ரீட்செய்வதற்கான வழிகாட்டி

முறையற்ற முறையில் ஸ்க்ரீட் செய்யப்பட்ட ஒரு தரை பின்னர் எளிதில் சேதமடையலாம், தனித்தனியாக பிரிந்து செல்லும் நிலையில் நீங்கள் கடினமான வேலையை மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும். எனவே, அதை நீங்களே செய்ய வேண்டுமானால், ஸ்க்ரீடிங்கிற்கு தரையைத் தயாரிப்பதற்கு முன்பே, ஸ்க்ரீட் பணிக்கு நன்கு தயாராக இருப்பது அவசியமானது.

கட்டுமானத்தில் ஸ்க்ரீடிங் நடைமுறையில் நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அநேகம் உள்ளன.

 

1 பகுதியாக பிரித்தல்



முதலில், நீங்கள் ஸ்கிரீட் செய்ய விரும்பும் தரையை பகுதிகளாகப் பிரிக்கவும். நீங்கள் ஸ்க்ரீட் செய்யப்போகும் அடுக்கின் உயரம் கொண்ட நீளமான மற்றும் நேரான மரத் துண்டுகளைப் பயன்படுத்தவும். இந்த துண்டுகள் ஈரமாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும், பின்னர் எளிதாக அகற்ற முடியும்.

 

2 ஸ்க்ரீட் படலம் ஒன்றை கொடுக்கவும்



ஸ்க்ரீட் கலவையை பரப்புவதற்கு ஒரு பூச்சுக் கரண்டி, மட்டப் பலகை அல்லது மட்டக் கம்பை பயன்படுத்தி, அறையின் நுழைவாயிலிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதியை ஸ்கிரீட் கலவையின் சமன் செய்யப்பட்ட பூச்சுடன் மூடுவதன் மூலம் தொடங்கவும். விளிம்புகளை மென்மையாக்க மற்றும் பகுதியை ஸ்க்ரீடிங் செய்து முடிக்க ஒரு டேம்பரைப் பயன்படுத்தவும்.

 

3. தரையை சமப்படுத்துதல்



உங்கள் ஸ்க்ரீட் சுயமாக சமப்படுத்தும் கலவையாக இல்லாமல் இருந்தால் உங்களுக்கு ஒரு சமப்படுத்தும் கலவை தேவைப்படும். தளத்தை சமப்படுத்துவதற்கு ஒரு மரத்துண்டு அல்லது மட்டக்கம்பை பயன்படுத்தலாம். பிரிப்பான்களாக (divaidar) பயன்படுத்திய மரத் தடுப்புகள் மீது வைத்து முன்னே தள்ளவும் முனைகளில் மெதுவாக சாய்த்து வெட்டு முனைபோல் பாவித்து பக்கவாட்டில் நகர்த்தி முழுமையாக பரப்பவும்.

 

உங்களது ஸ்க்ரீட் சுயமாக சமப்படுத்தும் கலவையாக இருந்தால் அது ஏற்கனவே சமப்படுத்தும் கலவை கொண்டது போல் இருக்கும். அது ஸ்க்ரீட்-ஐ ஊற்றியதும் தானாகவே அது இறுக்கச் செய்யும்.

 

4. மீண்டும்



இந்த செயல் முறையை அனைத்துப் பகுதி கான்கிரீட் அல்லது மணல் ஸ்க்ரீட் தரை முழுமையடையும் வரை திரும்பவும் செய்யவும். அடுத்து மரப் பிரிப்பான்களை எடுத்துவிட்டு அதனால் ஏற்பட்ட காலி இடத்தை நிரப்பவும்..

 

5. மிதப்பவை & ஸ்க்ரீட் பதனப்படுதல்



புதிய ஸ்க்ரீட் படலத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அது நிறுவப்பட்டவுடன் மற்றும் கான்கிரீட் நீர் வெளியே வந்த பிறகு மீண்டும் ஒருமுறை நீக்க முடியும்.

 

விளிம்புகளில் மூடப்பட்ட பாலிதீன் தாள்கள் கொண்டு தொடாமலே விட்டுவிட்டால், ஸ்க்ரீட் அடுக்கு பதப்பட சுமார் ஏழு நாட்கள் பிடிக்கும். அது அடுக்கு மற்றும் ஸ்க்ரீட் செய்யப்பட பரப்பளவையும் சார்ந்தது.

 

6. பொருத்தமற்ற சுத்தம் செய்தல்



தரை ஒருமுறை பதனப்பட்டதும், அது உலர்வதற்கு குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும். இந்த காலத்தில் அதன் மீது எந்த ஒரு தரைப் படலத்தையும் கொடுக்காமல் தவிர்ப்பது மிக நல்லது.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1) ஃப்ளோர் ஸ்க்ரீட் என்றால் என்ன?

 

ஃப்ளோர் ஸ்க்ரீட் என்பது ஒரு மெல்லிய படலம் அது முக்கியமாக சிமண்ட், மணல் மற்றும் தண்ணீரால் தயாரிக்கப்பட்ட அது கான்கிரீட்டின் கீழ்ப் பகுதில் கொடுக்கப்பட்டு ஒரு வழுவழுப்பான மற்றும் சமமான மேற்பரப்பை கொடுக்கிறது.

 

2) ஃப்ளோர் ஸ்க்ரீட் உலர்வதற்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?

 

ஃப்ளோர் ஸ்க்ரீட் உலர்வதற்கான காலம் பல காரணங்களைச் சார்ந்தது, அதாவது படலத்தின் தடிமன் , கால நிலை மற்றும் ஈர்ப்பத நிலை ஆகியவற்றை. பொதுவாக அது சில நாட்களில் இருந்து சில வாரங்கள் வரை ஸ்க்ரீட் உலர்வதற்கு எடுத்துக்கொள்ளும்.

 

3) ஃப்ளோர் ஸ்க்ரீட் எவ்வளவு தடிமனாக இருக்கலாம்?

 

ஃப்ளோர் ஸ்க்ரீட்டின் தடிமன் அமைக்கப்பட்ட தரையின் வகை, தரைக்கு கீழே உள்ள நிலை மற்றும் சுமை தாங்கும் தேவைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. ஒரு தகுதி வாய்ந்த நிபுணர் உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு பொருத்தமான தடிமனை பரிந்துரைக்க முடியும்.



ஒரு ஃப்ளோர் ஸ்க்ரீட் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வதோடு கூட செயல்முறையை செயல்படுத்த உங்களுக்கு முறையான பயிற்சி மற்றும் உபகரணங்கள் தேவை. நிறுவல் நடைமுறையில் ஏதேனும் தவறுகள் மற்றும் தாமதங்களைத் தவிர்க்க, வேலையைச் செய்ய நிபுணர்களைக் கொண்டு வருவது நல்லது.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்

  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....